நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

x
தினத்தந்தி 5 Jun 2021 11:54 PM IST (Updated: 5 Jun 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக உயர்ந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-545, ஐதராபாத்-508, விஜயவாடா-524, மைசூரு-550, மும்பை-565, பெங்களூரு-550, கொல்கத்தா-580, டெல்லி-545.
கறிக்கோழி கிலோ ரூ.81-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.84 ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.85 ஆக உயர்ந்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story