ஒடிசா மாநிலத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் திருச்சிக்கு வந்தது


ஒடிசா மாநிலத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் திருச்சிக்கு வந்தது
x
தினத்தந்தி 6 Jun 2021 12:14 AM IST (Updated: 6 Jun 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சிக்கு 80 டன் திரவ ஆக்சிஜன் வந்தது. அவை 13 மருத்துவமனைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது.

திருச்சி, 

ஒடிசா மாநிலத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சிக்கு 80 டன் திரவ ஆக்சிஜன் வந்தது. அவை 13 மருத்துவமனைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது.

மத்திய ரெயில்வே அமைச்சகம் வினியோகம்

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தால் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகினர். இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் பலர் இறந்தனர்.

எனவே, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நாடு முழுவதும் 20 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜன் வினியோகம் செய்திட மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதுவரை 1,125 டன் திரவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருச்சிக்கு 80 டன் ஆக்சிஜன் வந்தது

மேலும் 7 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 422 டன் திரவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 7.40 மணிக்கு திருச்சி முதலியார் சத்திரம் ரெயில்வே குட்ஷெட் யார்டுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 80 டன் திரவ ஆக்சிஜன் வந்தது.
ஒடிசா மாநிலம் பிலாய் ஸ்டீல் பிளாண்ட் (செயில்) நிறுவனத்தில் இருந்து 4 சிலிண்டர் வேகன்களில் தலா 20 டன் திரவ ஆக்சிஜன் வீதம் மொத்தம் 80 டன் கொண்டு வரப்பட்டது. திருச்சி குட்ஷெட் யார்டில் இருந்து டேங்கர் லாரிகளில் பரிமாற்றப்பட்டு 13 மருத்துவமனைகளுக்கு தேவையான அளவில் ஆக்சிஜன் பிரித்து அனுப்பப்பட்டது.

அதன்படி திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தலா 12 டன், திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 10 டன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 8 டன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 7 டன்,  புதுக்கோட்டை ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு 6 டன், நாமக்கல், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தலா 5 டன், நாகை, கும்பகோணம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு தலா 4 டன், அரியலூர் அரசு மருத்துவமனைக்கு 2 டன், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 1 டன் என பிரித்து அனுப்பப்பட்டது.

Next Story