தற்கொலை
தற்கொலை
கோவை, ஜூன்.6-
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் வெங்கட்சிவையா (வயது 44). இவருடைய மனைவி அபிராமி (42). இவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சியாளராக பணியாற்றினர். இவர்களுக்கு கடந்த மாதம் 25-ந் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதற்காக அவர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையிலும் வெங்கட்சிவையாவுக்கு லேசான மூச்சுத்திணறல் இருந்து வந்தது.
இதனால் மனவேதனையடைந்த அவர் கடந்த 3-ந் தேதி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story