நாடு முழுவதும் தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி; கலெக்டரிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. மனு
நாடு முழுவதும் தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட வலியுறுத்தி கலெக்டரிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
தென்காசி:
ஜனாதிபதிக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை மனு எழுதியுள்ளார். அதனை தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரனிடம் அவர் வழங்கினார். அதில் கூறி இருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்றால் இந்தியா பேரழிவில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இதனை தடுப்பதற்கு தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு தனது கடமையில் இருந்து தவறி விட்டது. இந்தியாவில் 140 கோடி மக்கள்தொகை உள்ளது. ஆனால் மத்திய அரசு 39 கோடி தடுப்பூசி மட்டுமே வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளது. கடந்த மே மாதம் 31-ம் தேதி வரை 21 கோடியே 31 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 4 கோடியே 45 லட்சம் பேருக்கு இரண்டு முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலை நீடித்தால் இன்னும் வயதானவர்களுக்கு தடுப்பூசிகள் போட்டு முடிவதற்கு 3 வருடங்களாகி விடும். எனவே தினமும் 1 கோடி பேருக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story