கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்வு


கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 1:49 AM IST (Updated: 6 Jun 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பலூர்:

102 ஆக உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 9,503 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 7,295 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் கொரோனாவிற்கு பலியானோர் பட்டியலுடன் நுரையீரல் நிமோனியா தொற்றால் மே, ஜூன் மாதங்களில் உயிரிழந்த 10 பேரின் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 2,106 பேரில் 1,658 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 448 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 60,804 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story