அதிக போதைக்காக சாராயத்தில் மாத்திரை கலந்து விற்றவர் கைது


அதிக போதைக்காக சாராயத்தில் மாத்திரை கலந்து விற்றவர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2021 1:50 AM IST (Updated: 6 Jun 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே அதிக போதைக்காக சாராயத்தில் மாத்திரை கலந்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிமடம்:

சாராயம் விற்பனை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு கொளத்தூர் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
இதில் கொளத்தூர் கிராமத்தில் உள்ள தைலமரக்காடு பகுதியில் இருந்த ஒருவர், போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரகுபதி (வயது 31) என்பதும், அவர் அந்த பகுதியில் 80 லிட்டர் சாராய ஊறல் போட்டு இருந்ததும், விற்பனை செய்வதற்காக 5 லிட்டர் கேனில் 3 லிட்டர் சாராயம் வைத்திருந்ததும் தெரியவந்தது.
கைது
மேலும் அதிக போதைக்காக மாத்திரைகளை வாங்கி சாராய ஊறலில் கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்து ரகுபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story