பணம் பறித்த 3 பேர் கைது
தினத்தந்தி 6 Jun 2021 2:05 AM IST (Updated: 6 Jun 2021 2:05 AM IST)
Text Sizeசிவகாசியில் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 36). இவர் நேற்றுமுன்தினம் திருத்தங்கல்-எஸ்.என்.புரம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேல்சாமி (34), செல்வம் (26), முத்துவேல் (19) ஆகியோர் அசோக்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1500-யை பறித்து சென்றனர்.
இதுகுறித்து அசோக்குமார், திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire