கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது. மேலும் 13 பேர் பலியாகினர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது. மேலும் 13 பேர் பலியாகினர்.
472 பேருக்கு ெகாரோனா
மாவட்டத்தில் மேலும் 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,051 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 34,058 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,224 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5,539 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
13 ேபர் பலி
நோய் பாதிப்புக்கு மேலும் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,198 படுக்கைகள் உள்ள நிலையில் 814 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 384 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா சிகிச்சை மையங்களில் 1,563 படுக்கைகள் உள்ள நிலையில் 618 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 845 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி நடுத்தெரு, அல்லம்பட்டி, பேளம்பட்டி, அரசு ஆஸ்பத்திரி, ஜி.என்.பட்டி, காந்திநகர், பட்டேல் ரோடு, இ.பி. காலனி, சூலக்கரை, பாவாலி, பராசக்தி நகர், கலைஞர்நகர், சின்னமூப்பன்பட்டி, ரோசல்பட்டி, லட்சுமி நகர், சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, போக்குவரத்து போலீஸ்பிரிவு, இனாம்ரெட்டியபட்டி, கத்தாளம்பட்டி, ஆமத்தூர், பேராலி ரோடு, பட்டம்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாவட்ட பட்டியலில் 158 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பட்டியலில் 472 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story