ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Jun 2021 4:53 AM IST (Updated: 6 Jun 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,807 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 205 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் கொரோனா தொற்று காரணமாக சிவகங்கையை சேர்ந்த 53 வயது ஆண் ஒருவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

Next Story