மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது


மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2021 4:53 AM IST (Updated: 6 Jun 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்

காரைக்குடி
காரைக்குடி கீழத்தெரு ஐஸ்கேணி பகுதியை சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு (வயது 76). இவர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் இவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின்பேரில் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். .விசாரணையில் சத்யா நகரை சேர்ந்த சரவணன்(வயது 28) இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து சரவணனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8 பவுன் தங்கச்சங்கிலியை மீட்டனர்.

Next Story