சேலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய ஊர்க்காவல் படை வீரர் கைது
வீட்டில் சாராயம் காய்ச்சிய ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
வீட்டில் சாராயம் காய்ச்சிய ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
சேலம் மாநகர பகுதியில் சாராய வேட்டையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அருகே வலசையூர், தாசநாயக்கன்பட்டி பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக வீராணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையில் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு விவேகானந்தன் (வயது 36) என்பவர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சி ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த 50 லிட்டர் சாராயம் ஊறலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊர்க்காவல் படை வீரர்
கைதான விவேகானந்தன் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. வருமானத்திற்காக தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் சாராய ஊறல் போட்டுள்ளார். பழங்கள் வாங்கி வந்து ரகசியமாக சாராயம் காய்ச்சி தனக்கு தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து கைதான ஊர்க்காவல் படை வீரர் விவேகானந்தனுக்கு கொரோனா பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story