சேலம் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்-இன்று நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் இன்று நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று 26 இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களில் 3,385 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை உத்தரப்பன்காடு, நாராயண நகர் 3-வது குறுக்குத்தெரு, லட்சுமி தெரு பகுதிகளிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பெருமாள் கோவில் மேடு, வித்யா நகர், சிவதாபுரம் பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறுகின்றன.
மேலும் மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை ராஜாஜி தெரு, கென்னடி நகர், தென் கிழக்கு லே அவுட், தாசில்தார் காலனி, ஜெயில் பின்புறம், சின்னதிருப்பதி, அண்ணாநகர், தியாகி அருணாசலம் தெரு, மார்க்கெட் தெரு, எஸ்.எம்.சி. காலனி, புது திருச்சி கிளை ரோடு, சஞ்சீவிராயன் பேட்டை பள்ளி, மூணாங்கரடு, சந்தைப்பேட்டை மெயின் ரோடு, ராமசாமி நகர், நெய்மண்டி தெரு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடக்கின்றன. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story