9 வயது சிறுமியை கொன்ற வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
9 வயது சிறுமியை கொன்ற வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள பூவான்வளவு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மகன் தனபால் (வயது 20). இவர் கடந்த மாதம் 9 வயது சிறுமியிடம் நுங்கு வெட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி சத்தம்போடவே, அவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைந்தனர். இந்த நிலையில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தனபாலை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் இருக்கும் அவரிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story