காரமடை அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு


காரமடை அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 4:57 AM IST (Updated: 6 Jun 2021 4:57 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

காரமடை

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காரமடை பகுதியில் தனிமைபடுத்தப்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு சுகாதாரத்துறை இணை இயக்குனர் நிர்மல்சன் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து தனியார் பள்ளியில் 400 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். பின்பு தோலம்பாளையம் ஊராட்சி உட்பட்ட ஜெ.ஜெ.நகர், எம்.ஜி.ஆர்.நகர், சீலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாமை பார்வையிட்டார்.

அப்போது, வெள்ளியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளியங்காடு ஊராட்சி பகுதிகளான ஆதிமதையனூர், வெள்ளியங்காடு, கண்டியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி மருதூர் ஊராட்சி பகுதிகளில் வீடுகள்தோறும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். 

மேலும் அந்தந்த கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு பள்ளிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், சீலியூர் அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story