சாலையில் கரடிகள் நடமாட்டம்
கோத்தகிரி அருகே தேயிலை தோட்ட சாலையில் கரடிகள் நடமாடி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே தேயிலை தோட்ட சாலையில் கரடிகள் நடமாடி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
வெறிச்சோடிய சாலைகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக முக்கிய சாலைகள், வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர்.
கரடிகள் உலா
தற்போது முழு ஊரடங்கால் கோத்தகிரி பகுதியில் உள்ள சாலைகளிலும், வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் சுதந்திரமாக சாலைகளில் உலா வருவதை காண முடிகிறது.
அதன்படி நேற்று காலை கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்ட சாலையில் 2 கரடிகள் உலா வந்தன. இதன் காரணமாக அந்த தோட்டத்திலும், அருகில் உள்ள தொழிற்சாலையிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
இதுபோன்றுஊரடங்கு காலத்தில் ஊருக்குள் சாதாரணமாக வலம் வரும் வனவிலங்குகளை வனத்துறையினர் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story