திருவள்ளூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்


திருவள்ளூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Jun 2021 6:05 AM IST (Updated: 6 Jun 2021 6:05 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா வேண்டுகோள் விடுத்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களை பாராட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி உணவு வழங்கினார்கள்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story