காதலியுடன் உல்லாசமாக வாழ விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி ஆன்லைனில் விற்ற வாலிபர்
சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக பல்வேறு புகார்கள் அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசுக்கு வந்தன.
இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரிய துரை தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் உணவு டெலிவரி செய்யும் உடையணிந்த வாலிபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையில் கள்ளிக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர், கள்ளிக்குப்பம் கிருஷ்ணம்மாள் தெருவைச் சேர்ந்த ஜோசப்(வயது 21) என்பதும், ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும்
தொழில் செய்து வருவதும், தற்போது அவர் வந்தது திருட்டு மோட்டார்சைக்கிள் என்பதும் தெரியவந்தது.மேலும் விசாரணையில் அவர், தனது காதலியுடன் உல்லாசமாக வாழ அதிகளவில் பணம் தேவைப்பட்டதால் தனது நண்பர் வெள்ளையன் என்பவருடன் சேர்ந்து 25-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ததும் தெரிந்தது.
ஜோசப்பை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 25 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி வெள்ளையனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story