குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் புகுந்த மலைப்பாம்பு


குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் புகுந்த மலைப்பாம்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 6:14 PM IST (Updated: 6 Jun 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் புகுந்த மலைப்பாம்பு

குடியாத்தம்

குடியாத்தம் ஆர்.கொல்லப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. நேற்று காலை செங்கல் சூளை அருகே பொதுமக்கள் சென்ற போது அங்கு சத்தம் வந்தது. அங்கே சென்று பார்த்தபோது சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு செங்கல் சூளையில் புகுந்து இருந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் காந்திக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர் இதுகுறித்து வனத்துறையினரிடம் கூறினார். இதையடுத்து வனவர் மாசிலாமணி தலைமையில் விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மோர்தானா காப்புக்காடுகள் மூங்கில் புதர் பகுதியில் மலைப்பாம்பை விட்டனர்.

Next Story