மாமல்லபுரம் அருகே 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பூசணிக்காய் அழுகி சேதம்
மாமல்லபுரம் அருகே 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பூசணிக்காய் அழுகி சேதம் அடைந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த அமைபாக்கம், நல்லூர், கடம்பாடி, காரணை, குன்னத்தூர், வடகட்பாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பலர் பூசணிக்காய் சாகுபடி செய்து இருந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் மளிகை, காய்கறி கடைகள் மூடப்பட்டது. இதனால் சில்லரை வியாபாரிகள் யாரும் பூசணிக்காய் வாங்க முன் வராததால் இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்து நல்ல விளைச்சலில் இருந்த பூசணிக்காயை அறுவடை செய்ய முடியாமல் போனது.
இந்த பகுதிகளில் மொத்தம் 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பூசணிக்காய் அழுகி சேதம் அடைந்தது.
Related Tags :
Next Story