உடன்குடியில் ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள்பறிமுதல் 2 பேரை கைது


உடன்குடியில்  ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள்பறிமுதல்  2 பேரை கைது
x
தினத்தந்தி 6 Jun 2021 9:19 PM IST (Updated: 6 Jun 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

குலசேகரன்பட்டினம்:
உடன்குடியில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார், உடன்குடி பஜார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த உடன்குடி கொத்துவா பள்ளி தெருவை சேர்ந்த ஜலானுதீன் மகன் தாவூத் (43) என்பவரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து புகையிலை பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள்
மேலும் தாவூதிடம் போலீசார் விசாரித்தபோது, உடன்குடி அருகே வெள்ளாளன்விளை கீழ தெருவைச் சேர்ந்த குணசீலன் மகன் ஜெயசிங் (39) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயசிங்கையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story