ஏழை மக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அரசு முயற்சி துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்


ஏழை மக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அரசு முயற்சி துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2021 9:26 PM IST (Updated: 6 Jun 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

ஏழை மக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அரசு முயற்சி செய்வதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு மல்லேசுவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உரம், ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு, அந்த தடுப்பூசி பணியை தொடங்கி வைத்து பேசுகையில், "மாணவர் சமுதாயத்திற்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுக்குரியது. இதற்காக மார்க்கெட்டில் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார். அதைத்தொடர்ந்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேசியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுப்படுத்தப்படும். நடப்பு மாதத்தில் 20 கோடி தடுப்பூசி தயாரிப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் வந்த பிறகு, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெறும். வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் 40 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது.

அதன் பிறகு நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சினை முடிவுக்கு வரும். முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கர்நாடகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அரசு முயற்சி செய்கிறது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றே பெரிய ஆயுதம். இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

Next Story