ஸ்ரீவைகுண்டம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரணம்
ஸ்ரீவைகுண்டம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நேதாஜி ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ரெங்கன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதேபோல வல்லநாடு வசவப்பபுரம் பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் அவரது சொந்த செலவில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் 70ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
Related Tags :
Next Story