நாகர்கோவிலில் பணியின்போது இறந்த மீன்வள மேற்பார்வையாளரின் தங்கைக்கு அரசு பணிக்கான நியமன ஆணை கனிமொழி எம்.பி. வழங்கினார்


நாகர்கோவிலில் பணியின்போது  இறந்த மீன்வள மேற்பார்வையாளரின் தங்கைக்கு  அரசு பணிக்கான நியமன ஆணை கனிமொழி எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 6 Jun 2021 9:46 PM IST (Updated: 6 Jun 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், நாகர்கோவிலில் பணியின் போது இறந்த மீன்வள மேற்பார்வையாளரின் தங்கைக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை கனிமொழி எம்.பி. வழங்கினார்

தூத்துக்குடி:
நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீன்வள மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த சரத்குமார் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். பணியின்போது இறந்ததால் கருணை அடிப்படையில், அவரது தங்கைக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தற்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணை அடிப்படையில் சரத்குமாரின் தங்கை ஹரிப்பிரியாவுக்கு பணி நியமன ஆணையை தூத்துக்குடியில் வைத்து வழங்கினார்.
அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story