நாசரேத் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
நாசரேத் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள ஒய்யான்குடியை சேர்ந்தவர் பிச்சைமணி மகன் செல்டன் செல்வின் (வயது 40). இவர் பழைய இரும்பு வியாபாரம் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திருத்துவபாய் செல்வி நாலுமாவடியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவா்களுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டு காம்பவுண்டிற்க்குள் நிறுத்தி வைத்திருந்தனர். சம்பவத்தன்று இரவு அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார்.. இதுகுறித்து செல்டன் செல்வின் நாசரேத் போலீசில் புகார் செய்தார். நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் போில் நாசரேத் சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் கடையனோடை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனா். அவர் மோட்டார் சைக்கிள் திருடர் என்றும், அவா் நாசரேத் அருகே உள்ள கேம்பலாபாத் மசூத் அலி மகன், அக்பர் அலி(22) என்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக நாசரேத் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story