குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்


குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 6 Jun 2021 10:04 PM IST (Updated: 6 Jun 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே ஊரடங்கால் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்களை வாங்கி சென்றனர்.

நன்னிலம்:
நன்னிலம் அருகே ஊரடங்கால் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்களை வாங்கி சென்றனர்.
மீன்பிரியர்கள் அவதி
கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 
மேலும் கடல்மீன்கள்,  கோழி, ஆட்டு இறைச்சி ஆகியவை விற்பனை செய்யமுடியவில்லை. இதனால் இறைச்சி, மீன் பிரியர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். 
குளத்து மீன்கள் விற்பனை 
இந்தநிலையில் கிராமங்களில் கடல் மீன்கள் கிடைக்காததால் குளத்தில் பிடிக்கப்படும் மீன்களுக்கும் மவுசு அதிகரித்து உள்ளது. இதனால் மீன்பிரியர்கள்  கிராமங்களில் குளங்களில் பிடிக்க கூடிய மீன்களை தேடி அலைந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி கிராமத்தில் ஒரு குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் வந்து வாங்கி சென்றனர்.   
விரால் ஒரு கிலோ ரூ.600-க்கும், கெண்ைட ரூ.200-க்கும், சிலேபி ரூ.200-க்கும்,   குறவை ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் சில மணிநேரத்திலேயே விற்று தீர்ந்தது. 
இதனால் சிலருக்கு மீன்கள் கிடைக்கவில்லை. மீன்கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Next Story