திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் விழுங்கிய நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்


திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் விழுங்கிய நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்
x
தினத்தந்தி 6 Jun 2021 10:09 PM IST (Updated: 6 Jun 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் விழுங்கிய நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு அருகே மேல்கச்சிராப்பட்டு பகுதியை சேர்ந்த லட்சுமணன். இவரது மகன் வெற்றிவேல் (வயது 2) நேற்று முன்தினம் வீட்டில் விளையாடி கொண்டிருந்த வெற்றிவேல் 1 ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளான். உடனடியாக அவரது தாய் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் சிறுவன் விழுங்கிய நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப் முறையில் வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் விழுங்கிய நாணயத்தை டாக்டர்கள் அகற்றினர்.

அதேபோல் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த பசுபதி என்பவரது மகள் ரம்யா (3) என்பவரும் 50 பைசா நாணயத்தை விழுங்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் அறுவை சிகிச்சையின்றி நாணயம் அகற்றப்பட்டது. 

இதில் காது, மூக்கு, தொண்டை, சிறப்பு நிபுணர்கள் சிந்துமதி, ராஜசெல்வம், மயக்கவியல் டாக்டர்கள் செந்தில்ராஜா, ஆனந்த்ராஜ் மற்றும் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகே சிகிச்சையை தொடங்குவது தற்போது வழக்கம். ஆனால் ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்து உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டு குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினரை மருத்துவக்கல்லூரி டீன் திருமால்பாபு உள்பட டாக்டர்கள் பாராட்டினர்.

Next Story