யூடியூப்பை பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது


யூடியூப்பை பார்த்து  குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2021 10:31 PM IST (Updated: 6 Jun 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

யூடியூப்பை பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது


உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் சாராய வாடை வீசுவதாகவும். இதனால் அந்த பகுதியில் உள்ள சிலருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதாகவும் எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீசார் புகைப்பட்டி கிராமத்துக்கு வந்து சாராய வாடை வெளிவந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஏழுமலை(வயது 40) என்பவர் செல்போனில் யூடியூப்பை பார்த்துக்கொண்டே குக்கரில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய குக்கர் மற்றும் அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 







Next Story