காரமடை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானை
காரமடை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை உலா வருகிறது.
காரமடை
காரமடை அருகே தோலம்பாளையம், பட்டிசாலை, காலனிபுதூர், சீங்குலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு தோலம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியது. இந்த காட்டு யானை தொடர்ந்து இந்த பகுதியில் முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் பீதியடைந்து உள்ளனர்.
மேலும் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story