குடியாத்தத்தில் தரைப்பாலம் மதகு கண்கள் சீரமைப்பு


குடியாத்தத்தில் தரைப்பாலம் மதகு கண்கள் சீரமைப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 10:54 PM IST (Updated: 6 Jun 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் தரைப்பாலம் மதகு கண்கள் சீரமைப்பு

குடியாத்தம்

குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்லும்போது இந்த தரைப்பாலத்தின் மதகுகண்கள் வழியாக தண்ணீர் செல்லும். தண்ணீர் அதிகமாக வரும்போது தரை பாலத்தின் மேலே வெள்ளம் செல்லும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் உள்ள மதகுகண்கள் குப்பை மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ளது.

தற்போது மோர்தானா அணை நிரம்பி உள்ளதாலும் தொடர் மழை பெய்தால் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாலும் கெங்கையம்மன் கோவில் மதகுகண்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 

இதனையடுத்து நேற்று காலை குடியாத்தம் நகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தரைப்பாலத்தில் மதகுகண்கள் சீரமைக்கப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், முன்னாள் நகர ன்ற துணைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

Next Story