நடமாடும் வாகனம் மூலம் 58 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது
நடமாடும் வாகனம் மூலம் 58 பேருக்கு கொரோனா சோதனை
ராமேசுவரம்
ராமேசுவரம் பகுதியில் முழு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களையும் நிறுத்தி போலீசார் சுகாதாரத் துறையின் மூலம் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சாலைகளில் சுற்றித்திரிந்த 58 பேருக்கு சுகாதாரத் துறையின் மூலம் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் பரிசோதனை செய்யப்பட்ட 58 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. ராமேசுவரம் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பின் தாக்கம் வெகுவாக குறைந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story