தொப்பூர் கணவாயில் பஞ்சு பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது-2 டிரைவர்கள் படுகாயம்
தொப்பூர் கணவாயில் பஞ்சு பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
லாரி கவிழ்ந்தது
ஆந்திர மாநிலத்தில் இருந்து பஞ்சு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோட்டுக்கு செல்வதற்காக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இருசமுத்து (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று டிரைவர் மயில்குமார் (28) என்பவர் உடன் வந்தார்.
தொப்பூர் கணவாய் கட்டமேடு அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் இருசமுத்து, மயில்குமார் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story