குளித்தலை பகுதியில் தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் போலீசார் எச்சரிக்கை


குளித்தலை பகுதியில் தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2021 11:22 PM IST (Updated: 6 Jun 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

குளித்தலை பகுதியில் தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை
போலீசார் சோதனை
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு தலைமையிலான போலீசார் குளித்தலை பகுதியில் வாகன சோதனையில் மேற்கொண்டனர். 
அப்போது, சாலையில் வாகனங்களில் செல்வோர்களை நிறுத்தி அவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரவு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- 
வாகனங்கள் பறிமுதல்
குளித்தலை பகுதியில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனை, மருத்துவம் தொடர்பாக செல்பர்களை தவிர மற்ற எவறும் வாகனங்களில் செல்லக்கூடாது. அதுதவிர அத்தியாவசிய பொருள் வாங்க செல்வோர் அருகில் உள்ள கடைகளில் நடந்து சென்று பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 
கொரோனா பரிசோதனை
அந்த வாகனத்தை ஓட்டிவந்தவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினால்தான் அவர்களின் வாகனங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லையெனில் வாகனங்கள் வழங்கப்படாது. இந்த நடைமுறை கண்டிப்பாக இனிவரும் நாட்களில் கடைப்பிடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story