திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இன்று முதல் மீன் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இன்று முதல் மீன் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இன்று முதல் மீன் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் இருந்து சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி திருச்சி மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மீன் சந்தைகளில் மீன் விற்பனை செய்ய அனுமதி இல்லை.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மொத்த விற்பனை செய்யும் மீன் கடைகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு வியாபாரிகள் மட்டும் மீன் வாங்கி செல்லலாம். சில்லறை விற்பனைக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story