தொட்டியம் அருகே மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்தது; 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதம்
தொட்டியம் அருகே முட்டை லோடு ஏற்றி வந்த மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்ததில் 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமானது.
தொட்டியம்,
தொட்டியம் அருகே முட்டை லோடு ஏற்றி வந்த மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்ததில் 30 ஆயிரம் முட்டைகள் சேதமானது.
மினிவேன் கவிழ்ந்தது
நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் இருந்து சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினிவேன் திருச்சியை நோக்கி நேற்று காலை புறப்பட்டது. மினிவேனை டிரைவர் நவீன் என்பவர் ஓட்டி வந்தார்.
மினிவேன் திருச்சி-நாமக்கல் சாலையில் தொட்டியம் தோளூர்ப்பட்டி பிரிவு ரோடு அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் நவீன் மற்றும் மினிவேனில் பயணம் செய்த கார்த்திக்கேயன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
முட்டைகள் உடைந்து சேதம்
மேலும் மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்ததில் முட்டைகள் உடைந்து சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. சம்பவ இடத்திற்கு வந்த முட்டை பண்ணை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் உடைந்த முட்டைகளை அகற்றியும் உடையாத முட்டைகளை பிரித்து எடுத்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story