கொரோனா விதிகளை மீறிய 2 பேர் மீது வழக்கு
கொரோனா விதிகளை மீறிய 2 பேர் மீது வழக்கு.
பந்தலூர்,
கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் இருந்து சேரம்பாடி அருகே உள்ள காந்திநகருக்கு தாளூர் சோதனைச்சாவடியை கடந்து ஒரு நபர் வந்தார். அவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், அதற்காக சொந்த ஊரான காந்திநகருக்கு செல்வதாகவும் கூறினார்.
இதனால் அவரை அதிகாரிகள் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து உண்மை தன்மையை அறிய கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் நடத்திய விசாரணையில், அந்த நபர் பொய்யான தகவலை கூறியிருப்பது தெரியவந்தது. இதேபோன்று கொரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பால்வாடி வளைவு பகுதியில் இருந்து ஒரு நபர் வெளியே வந்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக அந்த 2 நபர்கள் மீது கிராம நிர்வாக அலுவலர், சேரம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொரோனா விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story