கல்லூரி மாணவி மாயம்
கல்லூரி மாணவி மாயம் ஆனார்
கரூர்
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் நாகேஸ்வரி (வயது 19). இவர் கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துவந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்த நாகேஸ்வரி வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நாகேஸ்வரியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்குப்பதிவு செய்து மாயமான, நாகேஸ்வரியை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story