நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:43 PM IST (Updated: 6 Jun 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 303 பேர் பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளிபாளையம், குமாரமங்கலம், படைவீடு, சோழக்காடு மற்றும் காடச்சநல்லூரை பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்து உள்ளது.
======

Next Story