திருச்செங்கோடு அருகே சிறுமி பலாத்காரம்; கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
திருச்செங்கோடு அருகே சிறுமி பலாத்காரம்; கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருேக சிறுமியை பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கட்டிட மேஸ்திரி
திருச்செங்கோடு அருகே உள்ள மாங்குட்டைபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 22). கட்டிட மேஸ்திரி. இவர் வேலை செய்யும் இடத்தில் வேளாளர் காலனி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார்.
அப்போது பிரேம்குமார் அந்த சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் சிறுமியிடம் திருமணம் செய்வதாக நைசாக பேசி அவரை கடத்தி சென்று விட்டாராம்.
கைது
இதையடுத்து மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து திருச்செங்கோடு பகுதியில் இருந்த சிறுமியை மீ்ட்ட திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார் பிரேம்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
=====
Related Tags :
Next Story