நாமக்கல் நகராட்சியில் கட்டுப்பாட்டு மண்டலத்தில் கடைகளை திறக்க அனுமதி இல்லை ஆணையாளர் அறிவிப்பு

நாமக்கல் நகராட்சியில் கட்டுப்பாட்டு மண்டலத்தில் கடைகளை திறக்க அனுமதி இல்லை ஆணையாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:44 PM IST (Updated: 6 Jun 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நகராட்சியில் கட்டுப்பாட்டு மண்டலத்தில் கடைகளை திறக்க அனுமதி இல்லை ஆணையாளர் அறிவிப்பு

நாமக்கல், ஜூன்.7-
நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  நாமக்கல் நகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க 13 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அரசு அறிவித்து உள்ள எந்த தளர்வும் அனுமதிக்க இயலாது. எனவே இப்பகுதியில் கடைகளோ, அரசு அலுவலகங்களோ திறக்க அனுமதி இல்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்லவும் அனுமதி இல்லை. இதர பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்கலாம். ஆனால் அரசு அறிவித்தபடி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். அந்த நேரத்திலும் கூட்டத்தை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தவறும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
=========

Next Story