வனத்துறையினரை துரத்திய காட்டுயானை
வனத்துறையினரை துரத்திய காட்டுயானை.
கூடலூர்,
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக காயத்துடன் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிகிறது. அந்த காட்டுயானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன், கோவை வனக்கால்நடை டாக்டர் சுகுமாரன், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் மற்றும் மருத்துவ குழுவினர் நேற்று காலையில் மாக்கமூலா பகுதியில் உள்ள ஒரு காபி தோட்டத்தில் நின்றிருந்த அந்த காட்டுயானையை கண்காணித்து வந்தனர்.
அதற்கு சிகிச்சை அளிக்க அருகில் சென்றனர். உடனே ஆவேசத்துடன் வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினரை காட்டுயானை விரட்டியது. இதனால் அவர்களது முயற்சி கைவிடப்பட்டது. மேலும் உதவிக்கு முதுமலையில் இருந்து கும்கி யானைகளை கொண்டு வர வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story