முழு ஊரடங்கு காரணமாக விற்காததால் செடிகளில் வீணாகும் சம்பங்கி பூக்கள்
முழு ஊரடங்கு காரணமாக விற்காததால் செடிகளில் சம்பங்கி பூக்கள் வீணாகி வருகிறது.
காரமடை
முழு ஊரடங்கு காரணமாக விற்காததால் செடிகளில் சம்பங்கி பூக்கள் வீணாகி வருகிறது.
சம்பங்கி சாகுபடி
காரமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான வெள்ளியங்காடு, ஆதிமதியனூர், கண்டியூர், சின்ன கண்டியூர், தேக்கம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பங்கி பூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த பூக்களை 2 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய முடியும். இவ்வாறு அறுவடை செய்த பூக்களை விவசாயிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
சில வியாபாரிகள் விவசாயிகள் நிலத்துக்கே வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
செடியிலேயே விடப்பட்டது
இந்த நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளதால், மார்க்கெட் செயல்படவில்லை. அத்துடன் கோவில் களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மேலும் சுப நிகழ்ச்சிகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதனால் பூக்கள் தேவை மிகவும் குறைந்துவிட்டது.
எனவே அதன் விலை குறைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு கட்டுப் படியான விலை கிடைக்காததாலும், பூக்கள் வாங்க வியாபாரிகள் வராததாலும், சம்பங்கி பூக்கள் பறிக்காமல் செடியிலேயே விட்டு உள்ளனர்.
இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் கவலையடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கிலோ ரூ.20-க்கு விற்பனை
ஒரு ஏக்கரில் சம்பங்கி சாகுபடி செய்ய ஆள்கூலி, உரம், மருந்து உள்பட ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம்.
அவ்வாறு செய்யும்போது ஏக்கருக்கு 50 கிலோ பூக்கள் கிடைக்கும். விசேஷ நாட்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை கிடைக்கும்.
ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக பூக்களை வாங்கி வியாபாரி கள் வரவில்லை. அத்துடன் கிலோ ரூ.20 வரைதான் விற்கப்படுகிறது. அந்த விலைக்கும் நாங்கள் கொடுக்கலாம் என்றால் வியாபாரிகள் வருவது இல்லை.
இழப்பீடு வழங்க வேண்டும்
எனவே பூக்கள் அனைத்தும் செடியிலேயே பறிக்காமல் விட்டு உள்ளோம். சிலர் பூக்களை பறித்து வீணாக கொட்டி வருகிறார்கள்.
எனவே ஊரடங்க நேரத்தில் எங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டு உள்ளதால் இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story