அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதம்


அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதம்
x
தினத்தந்தி 7 Jun 2021 12:00 AM IST (Updated: 7 Jun 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையினால் சேதமானது. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையினால் சேதமானது. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல் சாகுபடி 
 வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம், ரகுமத்நகர், சேது நாராயணபுரம், மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ெதன்னைக்கு அடுத்த படியாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பிளவக்கல் பெரியார் அணை, கோவிலாறு அணை மற்றும் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பின. 
விவசாயிகள் கவலை 
இந்தநிலையில் விவசாயிகள் இந்த நீரை நம்பி மகிழ்ச்சியுடன் தங்கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி நீர்நிலைகளில் உள்ள நீரானது வேகமாக குறைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த 3 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையினால் சாய்ந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சாய்ந்த ெநற்பயிர்கள் 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நாங்கள் நெல் சாகுபடி செய்துள்ளோம். 
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் நெல் விவசாயத்தை நம்பியே இருக்கிறோம். கடந்த ஆண்டும் இதேபோல் நெல் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை பெய்து பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அறுவடைக்கு முன்பே தரையில் சாய்ந்து முளைக்க ஆரம்பித்து விட்டன. 
நிவாரணம் 
அதேபோல  இந்த ஆண்டும் தற்போது பெய்து வரும்மழையால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
எனவே சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story