கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
கோவை
கோவை மாநகர பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் சிரியன் சர்ச் ரோடு, தேவாங்கபுரம், ராயபுரம், தெப்பக்குளம் வீதி லே-அவுட், தியாகி குமரன் வீதி, ஆர்.ஜி. வீதி, அவினாசி ரோடு, நஞ்சப்பாரோடு, ஆடிஸ்வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மருந்து தெளிக்கப்படுகிறது. ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்பு பகுதியில் வீடுவீடாக சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை, உடல் ஆக்ஸிஜன் அளவு கண்டறியும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
கோவை அவினாசி ரோட்டில் அத்திகுட்டை பகுதியில் கொரோனா நோயாளிகளை கார் ஆம்புலன்ஸ் மூலம் கொடிசியாவில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லும் பணிகள் மற்றும் தொட்டிபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story