கோவையில் ஆதரவற்றோருக்கு உணவு வினியோகம்


கோவையில் ஆதரவற்றோருக்கு உணவு வினியோகம்
x
தினத்தந்தி 7 Jun 2021 12:08 AM IST (Updated: 7 Jun 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆதரவற்றோருக்கு உணவு வினியோகம்

கோவை

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சாலையோரத்தில் வசித்து வரும் ஆதரவற்றவர்கள் உணவு கிடைக்காமல் அவதியடைந்தனர். 

இதையடுத்து அவர்களுக்கு தன்னார்வலர்கள் சார்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வினியோகிக்கப்பட்டது. 

அதை வாங்க அங்கு ஏராளமானோர் திரண்டனர். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று அவர்கள் உணவுகளை வாங்கிச் சென்றனர்.

அதுபோன்று காந்திபுரம் பஸ்நிலையம் அருகே, சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி உள்பட மாநகரின் பல இடங்களில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது. 


Next Story