கவுண்டம்பாளையத்தில் திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள்
கவுண்டம்பாளையத்தில் திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள்
துடியலூர்
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே உணவிற்காக திருநங்கைகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கவுண்டம்பாளையம், நியூஸ்கியூம் காலனி, முருக்குகார லைன், பொங்கியம்மன் நகர், அசோக்நகர் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவுண்டம்பாளையம் அரசு பள்ளி அருகே நடந்தது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம் கலந்து கொண்டு 85-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு தலா 10 கிலோ அரிசி, மைதா, ரவை, உப்பு, எண்ணெய், சோப்பு, மஞ்சள், மிளகாய் மற்றும் சாம்பர் தூள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
இதில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் அன்னம், யமுனாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story