பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் உயர்வு


பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம்  உயர்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 7:04 PM GMT (Updated: 6 Jun 2021 7:04 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.  
 தொடர்மழை
வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 
இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீருக்கு பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் பிளவக்கல் பெரியார் அணை  மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 47 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால் வேகமாக உயர்ந்து வருகிறது. 
மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் அணைக்கு வரக்கூடிய நீரின் அளவும் அதிகரித்து உள்ளது. 
நீர்மட்டம் உயர்வு 
தொடர்மழையினால் பெரியார் அணையின் நீர்மட்டம்  வெகுவாக உயர்ந்து வருகிறது. 
 ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அணைக்கு வரும் நீரின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆதலால் அணை முழுவதும் நிரப்புவதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். வழக்கமாக கோடையில் நிரம்ப வாய்ப்பு இல்லாத பிளவக்கல் பெரியார் அணை தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பி வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story