செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி
நாங்குநேரியில் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
இட்டமொழி, ஜூன்:
நெல்லை மண்டலம் அம்பை கோட்டத்தில் உள்ள நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு, சேரன்மாதேவி, பாப்பாக்குடி, அம்பை, கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செம்மறி ஆடுகளுக்கு ஆட்டம்மை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அம்பை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ஆபிரகாம் ஜாப்ரி ஞானராஜ் முன்னிலை வகித்தார்.
கால்நடை டாக்டர்கள் ஜான் ரவிக்குமார் (பத்தமடை), அனிதா (செட்டிகுளம்), செல்வராணி (மருதம்புத்தூர்), சிந்தியாபெர்ல் (செங்களாகுறிச்சி) ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 6 ஆயிரம் செம்மறி ஆடுகளுக்கு ஆட்டம்மை தடுப்பூசி போட்டனர். தொடர்ந்து செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. செம்மறி ஆடுகளை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகி, செம்மறி ஆடுகளுக்கு ஆட்டம்மை தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story