கோவை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்
கோவை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்
துடியலூர்
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுமி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சிறுமியின் சித்தப்பா முருகேசன் என்பவர் குடித்துவிட்டு வந்து சிறுமியிடம் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துள்ளார்.
மேலும் சிறுமி வேலை செய்யுமிடத்தில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்துவந்த சம்பத் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் சிறுமி 2 மாதம் கர்ப்பமானார்.
இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் சம்பத் மற்றும் முருகேசன் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story