2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை


2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2021 1:41 AM IST (Updated: 7 Jun 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

பெண் தற்கொலை செய்து கொண்டார்

ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் கம்பர் நகரில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 44). இவருக்கும், ஆலங்குடி தாலுகா கல்லாலங்குடி சுந்தரமூர்த்தி-மகேஸ்வரி தம்பதியரின் மகள் எழில் மணி(27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு, ஜெயாநந்தன் (3), முரளிதரன் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம்  பிரபாகரன் வெளியில் சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எழில்மணி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் எழில்மணியின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்மணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த்மோகன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story