குடிநீர் தொட்டி இயக்குபவர் கொரோனாவுக்கு பலி
குடிநீர் தொட்டி இயக்குபவர் கொரோனாவுக்கு பலியானார்
கீரமங்கலம்
கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது 55). இவர், கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றும் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், இருமல், வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சல்லும் வழியில் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததால் அவரது உடலை மேற்பனைக்காடு மற்றும் கீரமங்கலம் கிளைகளைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கவச உடை அணிந்து பாதுகாப்பாக அடக்கம் செய்தனர். சுந்தரலிங்கம் இறந்த தகவல் அறிந்த கிராமமக்கள் சோகத்தில் மூழ்கியதோடு, முன்களப்பணியாளர் என்ற அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story